29.01.22 திருச்சி மாவட்ட காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, சைபர் க்ரைம் காவல் நிலையம் இணைந்து மண்ணச்சநல்லூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்மந்தமாக குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்தும், இணைய வழிக் குற்றங்கள், சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண் 155260 குறித்து சைபர் க்ரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் சிறப்புரையாற்றினார் மேலும் போதைப்பொருள், கள்ளச்சாராயம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தொலைபேசி எண் 10581 குறித்து காவல் ஆய்வாளர் சுமதி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் மேலும் குடும்ப வன்முறை, வரதட்சணை தடுப்பு, பணித்தளத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை பெண்களுக்கான உதவி மைய எண் 181 குறித்து மண...