OASYS Institute of Technology - Trichy

 


சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி              திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பால்வண்ணநாதன் (சைபர் கிரைம் குற்றப்பிரிவு) அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மணச்சநல்லூர்  பகுதியில் உள்ள OASYS Institute of Technology கல்லூரியில் சைபர் குற்றங்கள் குறித்து  கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி 11/02/2022 -ல் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அருண் ராஜ் மற்றும் தலைமை காவலர் திரு. குமார், மற்றும் காவலர்கள்   சைபர் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்தும், சைபர் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வினை விரிவான முறையில் மாணவர்களுக்கு  ஏற்படுத்தினார்.                    என்றும் மக்கள் பணியில் திருச்சி மாவட்ட காவல்துறை...